எங்கள் கதை (Our Story)
தேவனுடைய ஆச்சரியமான வழிநடத்துதலால் 1980-ல் தொடங்கப்பட்ட ஆத்துமநேசர் ஊழியங்களின் வரலாற்றுப் பதிவு.
அழைப்பும் தொடக்கமும்
போதகர் அந்தோனி அவர்கள் தனது வீட்டை விட்டு ஒரே ஒரு உடையோடும் சில ரூபாய்களோடும் தஞ்சாவூர் சென்று அப்போஸ்தலர் டி. ஆசீர்வாதம் அவர்களைச் சந்தித்தார். அவருடன் இணைந்து திருச்சியில் ஊழியத்தைத் தொடங்கினார். விசுவாச வாழ்க்கையையும் ஊழியப் பயிற்சிகளையும் தேவன் அவருக்குக் கற்றுக்கொடுத்தார்.
திருமணமும் இல்ல ஜெபமும்
போதகர் அந்தோனி அவர்கள் திருமதி அருள் மணி அவர்களைத் திருமணம் செய்தார். எந்த ஒரு வெளிப்புற ஆதரவும் இன்றி, தேவனையே முழுமையாக நம்பி முழங்கால் படியிட்டு ஜெபித்தனர். தங்களது சிறிய வாடகை வீட்டில் ஜெபக் கூட்டத்தைத் தொடங்கினர். கர்த்தர் அற்புத அடையாளங்கள் மூலமாக ஆத்துமாக்களைக் கூட்டினார்.
முதல் ஆலயம் மற்றும் வளர்ச்சி
ஆத்துமாக்கள் பெருகியதால், கர்த்தர் ஒரு புதிய தேவாலயம் கட்டும் இடத்தை தந்தார். எவ்வித நன்கொடையும் வசூலிக்காமல், கண்ணீரின் ஜெபத்தினாலும் விசுவாசத்தினாலும் மட்டுமே ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 4500 சதுர அடியில் புதிய கட்டிடம் எழும்பியது. தொடர்ந்து 5 கிளைச் சபைகளும், 40-க்கும் மேற்பட்ட ஆத்தும ஜெபக் குழுக்களும் தொடங்கப்பட்டன.
எங்கள் நோக்கம் & தரிசனம்
"இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்..." — ஏசாயா 61:1
உடைந்த இருதயமுள்ள ஜனங்களுக்கு ஆறுதல் அளிக்கவும், விடுதலையின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், ஆத்துமாக்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் கட்டியெழுப்பவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறோம்.